மருத்துவ சிகிச்சை சரியில்லாமல் தாயும் மகளும் உயிரிழப்பு - உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
காஞ்சிபுரம் நாகலூத்து மேடு பகுதியைச் சேர்ந்தவர் உதயராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி (21) இருவருக்கும் திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.
நிறை மாத கர்ப்பிணியான ராஜேஸ்வரி சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிகிச்சைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார்.
கடன் செயலி (LOAN APP) மோசடிடிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
சிகிச்சை சிக்கலானதாக இருந்ததால் அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு குழந்தை இறந்து பிறந்துள்ளது.
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ராஜேஸ்வரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கும் சிகிச்சை பலனளிக்காது செவ்வாய்க்கிழமை ராஜேஸ்வரி உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் சாலை மறியலுக்கு முயன்ற நிலையில் காவல்துறையினர் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சி நகர் நல அலுவலர் அருள் நம்பி பாதிக்கப்பட்டவர்களின் உறவினரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



No comments
Thank you for your comments