Breaking News

மறுமலர்ச்சி திமுக சார்பில் ஆளுநரை நீக்க கோரி கையெழுத்து இயக்கம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பொறுப்பில் இருந்து நீக்க கோரும் வகையில்  காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தினை  மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா துவக்கி வைத்தார்.


மறுமலர்ச்சி திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற 29 வது பொதுக்குழுவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பொறுப்பில் இருந்து ஆர்.என். ரவியை நீக்குமாறு குடியரசு தலைவரிடம் கேட்டுக் கொள்ளும் கையெழுத்து இயக்கம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை



 இதன் தொடர்ச்சியாக இன்று தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக சார்பில் மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா தலைமையில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,  மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கினர். 

இதில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் கையெழுத்திட்டு பேரணியாக சென்று பொது மக்களிடம் இது குறித்து விளக்கி கூறி கையெழுத்து பெற்றனர். 

இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாவட்டத் காங்கிரஸ் தலைவர் அளவூர் நாகராஜன், விசிக வை  சேர்ந்த பாசறை செல்வராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments