Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் போல் வரும் குடிநீர்...

 காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் போல் வரும் குடிநீர்.

துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்த முடியாமல் அவதி.

தொற்றுநோய் ஏற்படும் என அச்சம்.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு,சாலை தெரு பகுதியில் கடந்த சில தினங்களாக மாநகராட்சி குழாய் மூலம் வீடுகளுக்கு அளித்து வரும் குடிநீர் கழிவு நீர் போல வருவதாகவும் கடுமையான துர்நாற்றம் வீசி குடிநீராக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு வந்துள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் குழாய்களில் வரும் குடிநீரை தொட்டிகளிலும் பாத்திரங்களிலும் பிடித்து வைத்தால் விஷ வாயு போல துர்நாற்றம் வீசி வருவதோடு பயன்படுத்த முடியாமலும் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடிப்பதற்கு குடிநீர் தான் காசு கொடுத்து வாங்குகிறோம் என்றால், குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும், கூட காசு கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய சூழ்நிலையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். 

குழாய் மூலம் மாநகராட்சி வழங்கும் குடி தண்ணீரை பயன்படுத்தினால் தொற்று நோய் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

மேலும் குழாய் மூலம் வழங்கும் குடிநீரை சுத்தமாக வழங்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments

Thank you for your comments