காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீ விபத்து...
மின்கசிவாகி மின்ஒயர் பற்றி எரிந்து கரும்புகை சூழ்ந்ததால் மருத்துவமனையில் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் நாள்தோறும் 1000 கணக்காணோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளில் CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டு அதன் கட்டுபாட்டு மையமானது மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்திலே இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தீடிரென CCTV கேமரா கட்டுபாட்டு மையத்திலேயே மின்கசிவானது ஏற்பட்டு மின்வயர் முழுவதும் பற்றி எரிந்து அலுவலகம் மட்டுமின்றி மருத்துவமனையில் கருபுகையானது சூழ்ந்து காணப்பபட்டது.
இது குறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் உடனடையாக விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இதனால் மருத்துவமனையில் பெரும் அசம்பாவிதமானது தவிர்க்கப்பட்டது.
இயல்பு நிலைக்கு மாறாக இன்று திங்கட்கிழமை என்பதால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகள் வந்திருந்த நிலையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்பட்ட இந்த தீடிர் மின்கசிவு கசிவினால் மருத்துவமனை வளாகத்தில் கரும்புகை சூழ்ந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

.jpeg)

No comments
Thank you for your comments