குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய கள்ளச்சாராய வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான கணேசன்(53) மாரியம்மன் கோயில் தெரு, த/பெ.பொன்னுக்கண்ணு, எண்.416, வெங்குடி கிராமம், வாலாஜாபாத் தாலுக்கா என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க இன்று (19.06.2023) உத்தரவு பிறப்பித்தார்.

No comments
Thank you for your comments