Breaking News

ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளையொட்டி 500 நபர்களுக்கு புலால் உணவு வழங்கல்

காஞ்சிபுரத்தில் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி 500 நபர்களுக்கு புலால் உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.  காஞ்சிபுரம் காந்தி சாலை காமராஜ் சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி 500 நபர்களுக்கு புலால் உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.


இதில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கொடி ஏற்றி உணவு வழங்கப்பட்டது இதில் மாநகர தலைவர் நாதன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அளவூர். நாகராஜன் கலந்துகொண்டு அறுசுவை உணவை வழங்கினார்.  இதில் பகுதி தலைவர்கள் காஞ்சி காமராஜ் சப்தகிரி பார்த்தசாரதி பட்டு காமராஜ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் சுமங்கலி சீனிவாசன். எல்.வி. குமார். திருவேங்கடம், எம் .கே .சீனிவாசன், முன்னாள் நகர மன்ற தலைவர் டி.பி. ஸ்ரீனிவாசன், நூல் கடை ராதாகிருஷ்ணன் இஷ்ட லிங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பூக்கடை மணிகண்டன் நந்தகோபால். தாரன். இளைஞர்அணி யோகி, அரங்கநாத நகர் அன்பு, முத்துகணேசன். பிள்ளையார்பாளையம் கணேசன் .ராமலிங்கம். ஆறுமுகம் .ஏடி லோகநாதன் பாலமுருகன் வட்டாரத் தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்  கலந்து கொண்ட அனைவருக்கும் முன்னாள் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் வஜ்ரவேல் நன்றிகளை தெரிவித்தார்

No comments

Thank you for your comments