செல்போனை பறித்து சென்ற சிறுவனை பிடிக்க சென்ற இளைஞரை மதுபான பாட்டிலால் குத்தி படுகாயம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே மதுபான கடைக்கு சென்று வந்த வாலிபரிடம் செல்போன் பறிப்பு.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சாலை அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் நண்பர்கள் இருவருடன் காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது வாங்கிய அருந்தச் சென்றுள்ளார்.
மதுபான கடைக்கு சென்று வந்த நிலையில் அலெக்ஸ் பாண்டியன் கையில் வைத்திருந்த செல்போனை திடீரென மதுபான கடையில் இருந்து வந்த சிறுவன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓடி உள்ளான்.
செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவனை, அலெக்ஸ் பாண்டியன் துரத்திச் சென்று பிடித்த போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.
கைகலப்பில் சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த மதுபான பாட்டிலை உடைத்து தாறுமாறாக அலெக்ஸ் பாண்டியன் கையை கிழித்து உள்ளான்.
அலெக்ஸ் பாண்டியன் சிறுவனை பிடித்துக் கொண்டு படுகாயத்துடன் போராடிய நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் சிறுவனை மடக்கி பிடித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் அலெக்ஸ் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செல்போனை பறிப்பில் ஈடுபட்டு, மதுபான பாட்டிலை உடைத்து குத்திய காஞ்சிபுரம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த சிறுவனை பிடித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments
Thank you for your comments