Breaking News

செய்தியாளரை மிரட்டிய என்டிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழல் அம்பலம்...

சென்னை:  

காற்றாலைகள் ஏற்றி சென்ற என்டிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மூன்று மல்டி ஆக்ஸல் டெலிஸ்கோப்பிக் டிரைலர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் பிள்ளைச்சத்திரம் சாலையோரம் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

இதுகுறித்து  அங்கு செய்தி சேகரிக்க சென்ற  முன்னணி தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவரை  என்டிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள்  செய்தியாளரின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு அவர் எடுத்த அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டு அவரை மடக்கி உட்கார வைத்து மிரட்டல் விடுத்தனர்.  

இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையும் அச்சுறுத்தலும் தொடர்கதையாக உள்ளது என்று தனது வேதனை தெரிவித்துள்ளார். 

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில்  என்.டி.சி.குரூப் ஆப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மல்டி ஆக்ஸல் டெலிஸ்கோப்பிக் டிரைலர் சுமார் 25 டன் எடையுள்ள காற்றாலைகள் இறக்கைகளுடன் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த இறக்கைகள் பூந்தமல்லியில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் (ஆர்.ஆர்.பி., எரிசக்தி நிறுவனம் மற்றும் வெஸ்டாஸ் நிறுவனம்) மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று முன்தினம் 3 மல்டி ஆக்ஸல் டெலிஸ்கோப்பிக் டிரைலர் மூலம் காற்றாலைக்கான இறக்கைகள் ஏற்றப்பட்டு நிறுவன அதிகாரிகள் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதனிடையே, பிள்ளை சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்.டி.சி.குரூப் ஆப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மல்டி ஆக்ஸல் டெலிஸ்கோப்பிக் டிரைலர் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை இறக்கைகளுடன் சுமார் 20 அடி பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று மல்டி ஆக்ஸல் டெலிஸ்கோப்பிக் டிரைலர்கள் ஏரியில் சாய்ந்தது.

அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது வாகனம் கவிழ்ந்ததால்  அதிக சேதம் ஏற்பட்டது. இதை மூடி மறைத்து சரி கட்ட அந்த நிறுவனத்தின்  அதிகாரிகள் - ஊழியர்கள் முயற்சித்தனர்.

File Photo - கோப்பு படம்

இதையறிந்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது, செய்தி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த முன்னணி தொலைக்காட்சி செய்தியாளரை என்டிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களும், காற்றாலை உற்பத்தி செய்த நிறுவனத்தின் அதிகாரிகளும் செய்தியாளரின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு அவர் எடுத்த அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டு அவரை மடக்கி உட்கார வைத்து மிரட்டல் விடுத்தனர். 

இதைக் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு சக செய்தியாளர்கள் சென்றபோது அவர்களையும் மிரட்டும் தொணியில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அச்சுறுத்தினர். 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்ற போது, சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி வெங்கடேசன், சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் கார்த்திக், தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மிரட்டல் விடுத்த ஊழியர்களை மன்னிப்பு கேட்க வைத்ததன் பெயரில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இத்தகவலை அறிந்த  நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள செய்தியாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையில், விபத்து குறித்து செய்தி சேகரித்த  செய்தியாளரை மிரட்டியது ஏன்?  செய்தியாளர் மொபைல் வீடியோவை டெலிட் செய்தது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் பெயர்  வாகன எண் என அனைத்தும் மறைந்தனர்.  புகைப்படம் எடுக்கவிடாமல் தடுத்தனர். 

விபத்துதானே? ஏன் முறன்பாடாக நடந்துகொள்கிறார்கள் என்று பல்வேறு கேள்வில் நம்முன்னே நின்றது. ஏன்? எதற்காக? என்ற  சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தபோது  பல திடுக்கிடும் தகவல்கள் கசிந்தன. 

இந்தியாவிலேயே நாங்கள்தான் நம்பர் ஒன் (NO.1) என்று கூறி அடாவடிதனத்தில் ஈடுபடுவதாக அவர்கள் வட்டாரத்திலே (லாஜிஸ்டிக் வட்டாரத்தில்)  முனுமுனுக்கின்றனர். 

அதுமட்டுமின்றி முறையான அனுமதியின்றி நிறைய வாகனங்கள் செயல்படுவதாகவும், அரசியல்வாதிகள், சில பெரிய அதிகாரிகளின் பின்புலம் நிறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன.   

மேலும், அரசியல்வாதிகளின் மற்றும் சில பெரிய அதிகாரிகளின்  கருப்புப் பணம்தான் அந்த நிறுவனத்தில் அதிகம் புழகத்தில் உள்ளது என்றும், கருப்புப்பணம் கணக்கிற்கு கொண்டுவரப்படுகிறது என்றும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன. 

அதுமட்டுமின்றி தமிழகத்தில் காற்றாலை இறக்கைகள் ஏற்றி செல்லும் எந்த வாகனங்களுக்கும் முறையாக அனுமதி இல்லை  என்றும்,  இதனால் தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும்  பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்ற தகவலும் அம்பலமாகியுள்ளது. 

அதாவது, இந்த வாகனம் சுமார்  18 மீட்டர் 60 அடி  தகுதியுடையது(Eligible).   ஆனால் 66+5 மீட்டர் சுமார் 230 அடி நீளமுள்ள வாகனங்களாக செயல்படுகின்றன. ஆர்டிஓ, காவல் துறை என அனைத்து இடங்களிலும் பல லட்சங்கள் மாமூல் கட்டி இதுபோன்ற வாகனங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன.  

காற்றாலை இறக்கைகளை ஏற்றி செல்ல ODC Cargo அனுமதி பெறவேண்டும்.  காற்றாலை இறக்கைகள் சுமார் 72மீட்டர் அதாவது 236 அடி நீளம் கொண்டது. வாகனத்தையும் தாண்டி 20 அடி வெளியில் நீண்டு இருக்கும். இதுபோன்ற காற்றாலை இறக்கைகள் ஏற்றி செல்ல ODC Cargo அனுமதி கட்டாயம் பெறவேண்டும். ‘

ஆனால் தமிழகத்தில்  காற்றாலை இறக்கைகளை ஏற்றிச்செல்லும் என்.டி.சி.குரூப் ஆப் லாஜிஸ்டிக்ஸ், கலைவாணி டிரான்ஸ்போர்ட், ஜேபி மற்றும் குளோப் எகாலஜிஸ், நேபரோஸ் போன்ற குஜராத்தை சேர்ந்த  வாகனங்கள்  உட்பட பல  நிறுவனங்களும் முறையான அனுமதி இல்லை  என்று லாஜிஸ்டிக் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. 

அதனால்தான் விபத்து குறித்து செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்துள்ளனர். நிறுவனத்தின் பெயர் வாகன எண் என அனைத்தையும் மறைக்க முயற்சித்துள்ளனர். 

லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களால் மட்டுமே அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக அம்பலாமாகியுள்ளது. ஆர்டிஓக்கள் பல லட்சம் மதிப்புள்ள ஆடம்பர கார்கள், கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ளது எப்படி என்பதும் இதிலிருந்து அம்பலமாகிறது. 

இதுபோன்ற லாஜிஸ்டிக் நிறுவனங்களால் கருப்பு பணம் மறைக்கப்படுகிறது. அரசியல்வாதிகளின் பினாமிகளாக செயல்படுவது, அரசுக்கு வருவாய் இழப்பு,  அரசியல் பின்புலத்தால் முறையான அனுமதியின்றி வாகனம் இயக்கம் என அடுக்கடுக்கான அத்துமீறல்கள் ஊழல்களும் அம்மபலமாகியுள்ளது என்பதுதான் நிதர்சனம். 

மத்திய அரசும் மாநில அரசும் இதுபோன்ற லாஜிஸ்டிக் நிறுவனங்களில் ரெய்டு நடத்தினால் உண்மை என்னவென்று வெளிச்சத்திற்கு வரும் .  அரசுக்கு வருவாய் இழப்பு தவிர்க்கப்படும்.  நடவடிக்கை பாயுமா பொருத்திருந்து பார்ப்போம்...


No comments

Thank you for your comments