Breaking News

அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன முன்மாதிரி பேருந்து பயணிகள் நிழற்கூடம்

காஞ்சிபுரம்

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன முன்மாதிரி பேருந்து பயணிகள் நிழற்கூடம் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் அமைப்பு.

திறப்பு விழாவிற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்,  பொதுமக்களை அழைத்து அவர்கள் கையால் ரிப்பன் வெட்டி திறக்க  வைத்தார்.


காஞ்சிபுரம் மாநகராட்சி 46 ஆவது வார்டு காந்திநகர் பகுதி உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது.

காந்திநகர் பகுதியில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் தேவை என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க. சுந்தர் தனது தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பேருந்து பயணிகள் நிழறகூடம் கட்ட அனுமதி அளித்தார்.

அதன்படி காந்திநகர் பகுதியில் தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், ஆண்,பெண், என இரு பாலாருக்கும் தனித்தனியாக கழிவறை வசதி, மின்விளக்குகள்,மின்விசிறி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏறி வர சாய்தள வசதி,உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நவீன பேருந்து பயணிகள் நிழற்குடைத்தை திறந்து வைக்க வருகை தந்த உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்,யாரும் எதிர்பார்காத நிலையில் திறப்பு விழாவை வேடிக்கை பார்க்க வந்த பொது மக்களை அழைத்து, அவர்கள் கையில் கத்தரிக்கோலை வழங்கி ரிப்பன் வெட்டி பேருந்து பயணிகள் நிழற்கூடத்தை  திறக்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

பின்னர் தனது கையால் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும்,கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களை வைத்து பேருந்து பயணிகள் நிழற்குடைத்தை திறந்து வைத்த, சட்டமன்ற உறுப்பினரின் செயல்,காந்தி நகர் பகுதி பொது மக்களிடையே பெரும் நெகழ்ச்சியையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

பேருந்து பயணிகள் நிழற்கூடம்  திறப்பு விழாவில் காஞ்சிபுரம் எம்பி கேர் செல்வம் எம்எல்ஏ சிபிஎம்பி எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கட்சியை நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments