Breaking News

கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ மூன்றாம் நாள் காலை உற்சவம். ஊதா நிற பட்டு உடுத்தி தங்க கருட  வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து காட்சியளித்த காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பல்லாயிர கணக்கான பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்தனர்


108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முன் தினம்  கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஊதா நிற பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.

பின்னர் மேளதாள, பேண்ட், வாத்தியங்கள், முழங்க, வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, சிவப்பு பட்டு உடுத்திய ஸ்ரீ வரதராஜ பெருமாள் தங்க கருட  வாகனத்தில், பாதம் தங்கிகள் தூக்கிச் செல்ல காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து கோவிந்தா கோவிந்தா என வணங்கி வழிபட்டனர்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால்  போக்குவரத்து நெரிசலை தடுக்க நான்கு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளனர். 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் அவர்கள் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்  பொதுமக்களுக்கு  அன்னதானம் நீர்மோர் தண்ணீர் கேன்களும் விநியோகம் செய்யப்பட்டது

அதேபோல போக்குவரத்து சேவையே பொருத்தமட்டில் தற்காலிக புறநகர் பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது சென்னை,பூந்தமல்லி மார்க்கங்கிளில் செல்லக்கூடிய பேருந்துகள் புதிய ரயில்வே நிலையம் பகுதியிலும், வேலூர், திருத்தணி, திருப்பதி போன்ற மார்க்கங்களில் செல்லக்கூடிய பேருந்துகள் ஒலிமுகமது பேட்டை சந்திப்பு பகுதியிலும், தாம்பரம், செங்கல்பட்டு செல்லக்கூடிய பேருந்துகள் பழைய ரெயில்வே நிலையம் பகுதியிலும், உத்திரமேரூர், கீழ்ரோடு வழியே செல்லக்கூடிய பேருந்துகள் ஓரிக்கை மிலிட்டரி ரோடு பகுதியிலும் திருச்சி,விழுப்புரம், செய்யார் மார்ங்களிலில் செல்லக்கூடிய பேருந்துகள் செவிலிமேடு சந்திப்பு பகுதியிலும் நிறுத்தப்பட்டு அங்கிருந்து பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி பயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

No comments

Thank you for your comments