Breaking News

வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி 208 பால்குட விழா

வைகாசி விசாகப் பெருவிழாவை ஒட்டி தொண்டை மண்டல வேளாளர் சங்கம் சார்பில் 208 பால்குட விழாவில்  நடைபெற்றது.


தமிழகம் முழுவதும் அனைத்தும் முருகன் திருத்தலங்களிலும் இன்று வைகாசி விசாக பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என அழைக்கப்படும் குமரக்கோட்டத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் வைகாசி விசாகப் பெருவிழா ஒட்டி முருகப்பெருமானை தரிசித்து அருள் பெற்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட தொண்டை மண்டல வேளாளர் சங்கம் சார்பில் 208 பால்குடம் அபிஷேகம் விழா கட்சபேசஸ்வரர் கோயிலில் இருந்து துவங்கி மேளதாளம் முழங்க குமரக்கோட்டம் திருக்கோயிலை வலம் வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அரகரா அரோகரா என கோஷங்கள் எழுப்பியவாறு திருக்கோயிலில் வலம் வந்து பாலாபிஷேகம் நிகழ்வைக் கண்டு முருகன் அருள் பெற்றனர்.

கலந்து கொண்ட  அனைவருக்கும் முருகன் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் வைகாசி விசாக பெருவாழாவைஒட்டி திருக்கோயிலில் பக்தர்கள் புளியோதரை , கேசரி,  சர்க்கரை பொங்கல், உள்ளிட்டவைகளை அன்னதானம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் தொண்டை மண்டல வேளாளர் சங்க மாநிலத் தலைவர் எல்லப்பன், மாநில ஆலோசகர் கணேசன், மாநில பொருளாளர் மனோகரன், மாநில பொதுச் செயலாளர் பூபதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments