Breaking News

தனியார் தொழிற்சாலை பேருந்தின் மீது இருசக்கர வாகனம் வந்து மோதி விபத்து - நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சி

காஞ்சிபுரம் கம்மாளதெரு பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த தனியார் கம்பெனி(FOXCONN) பேருந்தின் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் நிகழ்விடத்திலேயே பலி மேலும் ஒருவர் படுகாயத்துடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

தனியார்(FOXCONN)தொழிற்சாலை பேருந்தின் மீது இருசக்கர வாகனம் வந்து மோதி விபத்துக்குள்ளாகும் நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி


காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட டோல்கேட் அருகேயுள்ள காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி(62). இவருக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர்.இவரது இரண்டு மகள்களுக்குமே திருமணமாகிய நிலையில் மகன் தினேஷ்(வயது-25)Honey kitchen என்கிற உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தினேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பரான சின காஞ்சிபுரம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த மற்றொரு தினேஷ்(27) என்பவருடன் வெளியில் சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போது கம்மாள தெரு சந்திப்பினை கடக்க முற்பட்ட போது Foxconn தொழிற்சாலையிலிருந்து 2-nd சிப்ட் முடித்துவிட்டுவரும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பொன்னேரிக்கரை வழியாக கம்மாள தெரு சந்திப்பு பகுதியின் வழியாக பூக்கடை சத்திரம் நோக்கி வேகமாக வந்து சந்திப்பில் திரும்பிய போது அதிவேகமாக சங்கரமடம்-பூக்கடை சத்திரம் நோக்கி சென்றுகொட்டிருந்த போது எதிர்பாராத விதமாக Foxconn தொழிற்சாலை பேருந்து மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவரும் பலத்த காயங்களுடன் துடிதுடித்து கொண்டிருந்துள்ளனர்.சற்று நேரம் வரை இவர்களை காப்பாற்ற எவரும் முன்வராததால் காமாட்சி நகர் தினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழ்ந்தார்.மேலும் உடன் வந்த மற்றொரு தினேஷ் என்பவரும் பலத்த காயங்களுடன் துடிதுடித்து கொண்டிருந்த நிலையில் சற்று நேரம் கழித்த பின்னரே பொதுமக்கள் அவரை மீட்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவசர ஊர்த்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தற்போது தனியார் தொழிற்சாலை பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்தான நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

No comments

Thank you for your comments