காவலர்களுக்கு குறைதீர்ப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் காவலர்களுக்கு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் முனைவர்.C.சைலேந்திர பாபு. இ.கா.பா., அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் "உங்கள் துறையில் முதல்வர்" திட்டத்தின் கீழ் இன்று (13.06,2023) காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 20 காவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த மனுக்களில் பணிமாறுதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், சிறு தண்டனை ரத்து செய்தல், காவலர் குடியிருப்பு கோருதல், காவலர் சேம நல நிதியிலிருந்து மருத்துவ உதவித் தொகை கோருதல் உள்ளிட்ட துறை ரீதியான மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு உத்தரவிட்டார். இம்முகாமில் சம்ந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
.jpg)
.jpg)

No comments
Thank you for your comments