Breaking News

காஞ்சிபுரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர் நல மையங்களில் ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம், மே 31:

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மைய கட்டடங்கள்  கட்டப்பட்டு உள்ளது. இக்கட்டடங்களை இன்று (31.05.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட  உப்பேரிகுளம், பல்லவன் நகர், மகாலிங்கம் நகர், விஷ்ணு நகர், திருவீதிபள்ளம் போன்ற பகுதிகளில்  தலா ரூ.25 இலட்சம் மதிப்பில் 5 இடங்களில் ரூ. 1,25,00,000/- (ரூபாய் ஒரு கோடியே இருபத்தி ஐந்து இலட்சம் மட்டும்) நிதியுதவியில் கட்டப்பட்டு உள்ளது. 

இன்று பல்லவன் நகர், விஷ்ணு நகர், மகாலிங்கம் நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மைய கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். 

மேலும் இம்மையங்களில் மருத்துவ சேவையை விரைவில் தொடங்க மாநகராட்சி அலுவலர் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் க.கண்ணன், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களும் உடன் இருந்தனர்.

படவிளக்கம்}காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை விஷ்ணுநகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி மோகன்

No comments

Thank you for your comments