"நமக்கு தேவை உணவு புகையிலை அல்ல" என்கிற தலைப்பின் கீழ் ஓவிய போட்டி
உலக புகையிலை எதிர்ப்பு தினமானது ஆண்டுதோறும் மே 31-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஆன இன்று மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளானது ஏற்படுத்தப்பட்டது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகருக்குட்பட்ட ஏகாம்பரநாதர் சன்னதி தெருவிலுள்ள அன்னை தொழிற் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பிரியாராஜ் அறிவுறுத்தலின் பெயரில் "நமக்கு தேவை உணவு...! புகையிலை அல்ல"...! என்கிற தலையில் ஓவிய போட்டியானது நடைபெற்று.
இதில் அக்கல்லூரியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று புகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓவியங்கள் மூலம் விளக்கும் வகையில் வரைந்து தனது கைதிறமைகளை வெளிப்படுத்தினர்.
இதனையெடுத்து அந்த ஓவியங்களில் நமக்கு தேவை உணவு புகையிலை அல்ல என்பதை உள்ளிடக்கிய வகையில் அமைந்த சிறந்த மூன்று ஓவியங்கள் தேர்ந்தெடுக்கபட்டு ஓவியத்தினை வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு புகையிலை எதிர்ப்பு குறித்த உறுதிமொழியேற்றனர்.
இதில் புகையிலை கட்டுபாட்டு மைய ஆலோசகர் ஸ்ரீராம்,உளவியலாளர் மற்றும் சமூகவியலாளர் ஆகியோரும் கல்லூரியின் துணை முதல்வர் ரேவதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.




No comments
Thank you for your comments