Breaking News

வேலூர் மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

வேலூர் :

வேலூர் மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

வேலூர் குடியாத்தம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன் வேலூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், 

அங்கு பணியாற்றிய பூமா வேலூர் வருவாய் கோட்ட அலுவலக நேர்முக உதவியாளராகவும், 

அங்கு பணியாற்றிய நரசிம்மன் வேலூர் முத்திரை கட்டண தாசில்தாராகவும், 

தமிழ்நாடு மாநில வாணிபக்கழக வேலூர் கிடங்கு மேலாளர் சாமுண்டீஸ்வரி ராணிப்பேட்டை மாவட்ட சிப்காட் நிலம் எடுப்பு தாசில்தாராகவும், 

குடியாத்தம் தாலுகா ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சரவணன் அங்கேயே சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கான உத்தரவை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் பிறப்பித்துள்ளார். 

புதிய பணியிடத்தில் அனைத்து தாசில்தார்களும் உடனடியாக சேர வேண்டும். இல்லையென்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். பணியிட மாறுதல் குறித்து மேல்முறையீடோ அல்லது விடுப்பு விண்ணப்பமோ ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

No comments

Thank you for your comments