Breaking News

Autism குழந்தைகளை கண்டறியும் ஆரம்ப நிலை பயிற்சி மையம் தொடங்கிட தொண்டு நிறுவனக்களுக்கு வாய்ப்பு

புற உலக சிந்தனையற்றோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் துவங்கிட விருப்பமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   திருமதி. கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளதாவது, 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 0  -  6 வயதிற்குட்பட்ட புற உலக சிந்தனையற்ற  (Autism) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிதலுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் (Early Intervention  Centre for Autism) புதியதாக தொடங்கிட தகுதிவாய்ந்த தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புற உலக சிந்தனையற்றோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் துவங்கிட விருப்பமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த தொண்டு நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் இயங்கி வரும்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 16.6.2023 அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு 044-29998040  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments