இ சேவை மையத்தினை திறந்து வைத்தார் துணை மேயர் குமரகுருநாதன்
காஞ்சிபுரம் மேட்டு தெருவில் இ சேவை மையத்தினை மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மேட்டு தெருவில் தமிழக அரசு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை சார்பில் தமிழ்நாடு மின் ஆளுமை இ சேவை மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மாவட்ட தலைவர் அளவூர். நாகராஜன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாநகர தலைவர் நாதன் தலைமையில் குத்து விளக்கேற்றி பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் வஜ்ரவேல் ஏற்பாட்டின் படி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பகுதி தலைவர்கள் காஞ்சி காமராஜ். பட்டு காமராஜ். சப்தகிரி. பார்த்தசாரதி உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.
இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் தாரன் நந்தகோபால் அரங்கநாதர் நகர் அன்பு இளைஞரணி யோகி மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி இந்த இ சேவை மையம் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அனைவருக்கும் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் வஜ்ரவேல் நன்றிகளை தெரிவித்தார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

.jpg)

No comments
Thank you for your comments