Breaking News

தந்தை கண்முன்னே 3 குழந்தைகள் உட்பட 5 பேர் விபத்தில் உயிரிழப்பு

சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் சித்தேரிமேடு அருகே நின்றுகொண்டிருந்த இரும்பு லோடு ஏற்றி லாரி மீது கார் மோதிய விபத்தில் 3குழந்தைகள் உட்பட 5பேர் உயிரிழப்பு.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா சே.நாச்சியார் பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம்-இரத்தினா. இவர்களுக்கு ராஜலட்சுமி(5), தேஜா ஸ்ரீ (இரண்டரை வயது) மற்றும் 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் சென்னையிலுள்ள ராமஜெயத்தின் மாமியார் வீட்டியாடிற்கு வெள்ளிக்கிழமை சென்று அங்கிருந்த உறவுமுறையான ராஜேஷ்(29) என்பவரை அழைத்து கொண்டு மீண்டும் இன்று இரவு சொந்த ஊருக்கு சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரத்தை அடுத்த சித்தேரிமேடு பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது ராமஜெயம் சென்ற TATA ARIA காரின் டயர் வெடித்து சாலையின் ஓரமாக இரும்பு லோடுடன் நிறுத்த வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிகழ்விடத்திலேயே ராமஜெயத்தின் மனைவி இரத்தினா, குழந்தைகள் ராஜலட்சுமி(5வயது), இரண்டரை வயது குழந்தை தேஜா ஸ்ரீ, ராஜேஷ்(29) என நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 3 மாத குழந்தை, ராமஜெயம் காரில் சிக்கி தவித்து வந்த நிலையில் உடனடியாக இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டி போலீசார் இருவரையும் மீட்டு அவசர ஊர்த்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மூன்று மாத குழந்தையும் வழியிலேயே உயிரிழந்தது. ராமஜெயம்  காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பாலு செட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சாலை விபத்தில் தந்தை கண்முன்னே 3குழந்தைகள் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவமும் துடிதுடிக்க காட்சிகளும் அக்கிருந்தோரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் இந்த சாலை விபத்தினால் அச்சாலையே சற்று நேரம் பரபரப்புடனும் காணப்பட்டது.

No comments

Thank you for your comments