Breaking News

ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் சார்பில் மகா ஸ்வாமிகள் 130வது ஜெயந்தி விழா

மேற்கு சைதாப்பேட்டையில்  ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் சார்பில் மகா ஸ்வாமிகள் 130வது ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.   


மகா பெரியவர் என பக்தர்களால் போற்றி அழைக்கப்படும் காஞ்சி மகாசுவாமிகளின் 130 வது ஜெயந்தி விழா அவரது ஜென்ம நட்சத்திரத்தில் காஞ்சி சங்கரமடம் உள்ளிட்ட நாடுகளும் ஏன் அயல் நாட்டிலும் கூட அவரது ஆத்மாத்தமான பக்தர்களால் அதி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது 

அந்த வகையில் மேற்கு சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள பார்சன் நகர் வளாகத்தில் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது இதில் காலை கோ பூஜையுடன் துவங்கப்பட்ட விழா சிறப்பு ஹோமங்களும் வடுக பூஜை .கன்னியா பூஜை .சுமங்கலி பூஜை. தம்பதி பூஜைகளும் பாராயணங்களும் சிறப்பாக நடைபெற்றது 

விழாவின் நிறைவாக மகா சுவாமிகள் உற்சவர் திருமேனிக்கு பலவித வாசனை திரவியங்களால் அபிஷேகமும் ஏகாதச ருத்ன பாராயணத்துடன் கலசத்தில்ஆவாகனம் செய்யப்பட்ட தீர்த்தத்தை கொண்டு மகா சுவாமிகள் மற்றும் காமாட்சி அம்மன் திரு உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசுகள் கொண்டு சொர்ணாபிஷேகமும் நடைபெற்றது 

இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீரா தீபாரதனை நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டு பிரசாதங்கள் பெற்று சென்றனர்.

இந்த சிறப்புகள் மற்றும் பூஜைகளை மேற்குமாம்பலம்  பாலாஜி சாஸ்திரிகள் குழுவினர் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் அங்கத்தினர்களுடன் இணைந்து சிறப்பாக செய்தனர். 

இதனைத் தொடர்ந்து மாலை மகா சுவாமிகள் உற்சவமூர்த்திக்கு வளசரவாக்கத்தில் எழுந்தருள செய்து அங்கு சிறப்பு அலங்காரங்கள் செய்த பின் திருவீதியுலா  நிகழ்ச்சியும் நடைபெற்றது 

அடுத்த அனுஷ பூஜை ஜூலை 1ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது என டிரஸ்டி ராமன் வெங்கடா தெரிவித்தார்.

No comments

Thank you for your comments