ஒருங்கிணைந்த பணியாளர் விடுதியை தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆய்வு
இன்று (04.06.2023) காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில் ரூ. 680 கோடி மதிப்பீட்டில் 18,720 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளின் அருகாமையில் தங்கும் வகையில் சிப்காட் நிறுவனம் மூலம் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பணியாளர் விடுதியை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பணியாளர் விடுதியின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை வசதி, குடிநீர் வசதி, விளையாட்டு அரங்கம், கழிவு நீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.
பின்பு திருப்பெரும்புதூர் மாம்பாக்கத்தில், ரூ. 16.45 கோடியில் தொழில் தொடங்குவதற்கு மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ள சிப்காட் தொழில் புத்தாக்க மையத்தை (ஃபோர்ட்) தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 உபகரணங்கள் தயாரிப்புகள் மேம்பாட்டு மையம், முன்மாதிரி தயாரிப்பு வசதி (Proto Typing Facilitation) மற்றும் பயிற்சி மையம் போன்ற பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இவ் ஆய்வின் போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., சிப்காட் மேலாண்மை இயக்குநர் திருமதி எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

.jpg)

No comments
Thank you for your comments