தேவரியம்பாக்கம் கிராமத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க கைப்பந்து போட்டி
தேவரியம்பாக்கம் கிராமத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க கைப்பந்து போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.
கிராமப்புறத்தில் வசிக்கும் கிராமப்புற இளைஞர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் நல் ஒழுக்கத்தினை ஏற்படுத்தி,கல்வி, விளையாட்டு, உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊராட்சி மன்ற நிர்வாகங்களை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது
அதன்படி தேவரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள இளைஞர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டி தேவரியம்காக்கம் கிராமத்தில் நடைபெற்றது கைப்பந்து போட்டி துவக்க விழாவில் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்து கைப்பந்து போட்டியை துவக்கி வைத்தார்.
கைப்பந்து விளையாட்டு போட்டியில் சென்னை, மயிலாடுதுறை, திருப்பதி, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பத்திற்கு மேற்பட்ட கைப்பந்து விளையாட்டு வீரர்கள் அணியினர் போட்டிகளில் கலந்து விளையாடினார்கள்.
போட்டிகளின் முடிவில் முதல் பரிசு வென்ற வெண்குடி கலை குழுவினருக்கு ரூ.7000, இரண்டாவது பரிசு வென்ற தேவரியம்பாக்கம் கோகுல் கைப்பந்து அணியினருக்கு ரூபாய் 5000 மற்றும் மூன்றாம் இடம் பிடித்த வயலக்காவூர் கைப்பந்து அணியினருக்கு ரூபாய் 4000 மற்றும் வெற்றி கோப்பைகளை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கி வெற்றி பெற்ற இளைஞர்களை பாராட்டி ஊக்குவித்தார்.
தேவரியம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற இக் கைப்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை கோகுல் கைப்பந்து நண்பர்கள் குழுவைச் சார்ந்த சுதர்சன்,பேபி சுதாகர், ரமணன், கார்த்தி, பெருமாள், உள்ளிட்ட கிராம இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.



No comments
Thank you for your comments