Breaking News

காஞ்சிபுரத்தில் ஸ்ரீசீதா கல்யாண மகோற்சவம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள யாத்ரி நிவாஸ் கட்டிடத்தில் சீதா கல்யாண மகோற்சவம் விமரிசையாக நடைபெற்றது.



காஞ்சிபுரம் ஸ்ரீசீதாராம பஜனை மண்டலி சார்பில் 31வது ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம்  காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள யாத்ரி நிவாஸ் கட்டிடத்தில் தொடங்கியது.

பஜனை மண்டலியின் தலைவர் டாக்டர்.வி.பி.குமாரகிருஷ்ணன் தொடக்க விழாவிற்கு தலைமை வகித்தார். செயலாளர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.


சென்னை டாக்டர்.எம்ஜிஆர் மருத்துவ பல்கலையின் பதிவாளர் அஸ்வத்நாராயணன், கே.குப்புராவ் ஆகியோர் சீதா கல்யாண மகோற்சவத்தின் சிறப்புகளை விரிவாக பேசினார்கள்.மறுநாள் 5 ஆம் தேதி சுவாஷினி பூஜையும்,மறுநாள் 6 ஆம் தேதி விஷ்ணுசகஸ்ர நாம பாராயணமும்,லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முக்கிய நிகழ்வான சீதா கல்யாண மகோற்சவம் பாகவத சம்பிரதாய முறைப்படி நடைபெற்றது.மாயவரம் ஞானகுரு பாகவதர் அவர்களால் சிறப்பு பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.

விநாயகர் மற்றும் சீதாராமர் திருஉருவப்படங்கள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பதியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.

திருக்கல்யாணத்தையொட்டி அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் சுவாமி வீதி உலாவும், இரவு ஆஞ்சநேயர் உற்சவமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசீதா ராம பஜனை மண்டலியின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments