கிராம ஊராட்சி வளர்ச்சிக்கான திட்டம் ... மூன்று நாள் சிறப்பு பயிற்சி
காஞ்சிபுரம் :
உள்ளூர் வள ஆதாரங்களுடன் கிராம ஊராட்சி வளர்ச்சிக்கான திட்டம் ஊராட்சிகளில் உள்ளூர் அளவில் திட்டமிட்டு நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்கு அடைவதற்கான மூன்று நாள் சிறப்பு பயிற்சி காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர். கடலூர். விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் 30 பேருக்கு திருவண்ணாமலை மாவட்டம், சத்திய விஜயநகரத்தில் செயல்பட்டு வரும் மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவரியம்பாக்கம் அஜய்குமார், அயிமச்செரி ரவி, அங்கம்பாக்கம் ஏழுமலை, திருமுடிவாக்கம் மணி, தண்டலம் அரசு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இப்பயிற்சியில் பங்கேற்ற தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதாவது
கிராம வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ஒவ்வொரு ஊராட்சியும் ஒன்பது கருப்பொருட்கள் மற்றும் 17 பன்னாட்டு இலக்குகள் கொண்டு நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் அளவில் திட்டமிட்டு 2030க்குள் அடைவதுடன் உலகில் வாழம் ஒட்டு மொத்த மனித குலமும் செழிப்பு, அமைதி மற்றும் நட்புறவுடன் வாழ்ந்து, நாம் வாழும் பூமியை பாதுகாக்க வேண்டும் என ஐநா உறுப்பு நாடுகளோடு சேர்ந்து நமது இந்திய நாடும் செயலாற்றி வருகிறது.
தமிழ்நாடு அரசும் இந்த இலக்கை மாநில அளவில் அடைவதற்கான சீரிய முயற்சிகளின் காரணமாக ஊரக வளர்ச்சி மற்றம் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் மாநில, மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனங்கள் துறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்களுக்கு இப்பயிற்சியினை சிறப்பாக வழங்கியுள்ளது.
இப்பயிற்சிகள் பெறப்பட்ட பின் கிராமங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு கருப்பொருட்களையும் உள்ளூர் இலக்குகள் மற்றும் உள்ளூர் குறியீடுகளை அடைந்து அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு அடையச் செய்யும் வகையில் இப்பயிற்சி சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டருந்தது.
ஒன்பது கருப்பொருள்கள் பின்வருமாறு
1. வறுமை இல்லாத, வாழ்வாதாரம் நிறைந்த கிராம ஊராட்சி
2. நல வாழ்வு கிராம ஊராட்சி
3. குழந்தைகளின் நலன் கொண்ட கிராம ஊராட்சி
4. நீரில் தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி
5. சுத்தமான, பசுமை நிறைந்த கிராமம்
6. உட்கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி
7. சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு நிறைந்த கிராம ஊராட்சி
& சிறப்பான நிர்வாகம் நடை பெறும் கிராம ஊராட்சி
9. வளர்ச்சியில் பாலின சமத்துவ ஊராட்சி




No comments
Thank you for your comments