12-05-2023-ம் தேதி ராசி பலன்கள் மற்றும் பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, சித்திரை 29
நாள் - மேல் நோக்கு நாள் ↑
பிறை - தேய்பிறை
திதி : 09:06 AM வரை சப்தமி பின்னர் அஷ்டமி
நட்சத்திரம் : திருவோணம் 01:03 PM வரை பிறகு அவிட்டம்
யோகம் : சுப்ரம் 12:17 PM வரை, அதன் பின் பராம்யம்
கரணம் : பவம் 09:07 AM வரை பிறகு பாலவம் 07:58 PM வரை பிறகு கௌலவம்.
🌞சூரியன் மற்றும் 🌜சந்திரன் நேரம்
சூரியோதயம் - 5:48 AM
சூரியஸ்தமம் - 6:22 PM
சந்திரௌதயம் - May 12 12:09 AM
சந்திராஸ்தமனம் - May 13 12:52 PM
அசுபமான காலம்
இராகு - 10:30 AM – 12:05 PM
எமகண்டம் - 3:14 PM – 4:48 PM
குளிகை - 7:22 AM – 8:56 AM
துரமுஹுர்த்தம் - 08:18 AM – 09:09 AM, 12:30 PM – 01:20 PM
தியாஜ்யம் - 04:48 PM – 06:18 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் - 11:40 AM – 12:30 PM
அமிர்த காலம் - 01:49 AM – 03:19 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:11 AM – 04:59 AM
வாரசூலை : சூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம்
🌞 சூர்யா ராசி : சூரியன் மேஷம் ராசியில்
🌜 சந்திர ராசி : மே 13, 12:18 AM வரை மகரம் ராசி, பின்னர் கும்பம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
இன்றைய ராசி பலன்கள் :
மேஷம் : உடனிருப்பவர்களின் மூலம் புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக இருப்பார்கள். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : புதுமையான நாள்.
பரணி : முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரிஷபம் : பொருளாதாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். தெய்வ வழிபாட்டில் மனம் ஈடுபடும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். வாழ்க்கைத் துணைவரால் சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய தொழில் நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் உதவியின் மூலம் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
கிருத்திகை : இழுபறிகள் மறையும்.
ரோகிணி : திறமைகள் வெளிப்படும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம் : குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். கணிதம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சிக்கல்கள் உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
திருவாதிரை : அனுபவம் கிடைக்கும்.
புனர்பூசம் : நெருக்கடிகள் உண்டாகும்.
கடகம் : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் கலை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செய்கின்ற செயல்பாடுகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
சிம்மம் : மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிற்கு நெருக்கமானவர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : பிரச்சனைகள் நீங்கும்.
பூரம் : ஈர்ப்பு ஏற்படும்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கன்னி : வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். செய்யும் முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மந்தத்தன்மை குறையும்.
அஸ்தம் : ஒத்துழைப்பான நாள்.
சித்திரை : மதிப்பு கிடைக்கும்.
துலாம் : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : காரியசித்தி உண்டாகும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம் : இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எழுத்து சார்ந்த பணிகளில் கற்பனை திறன் வெளிப்படும். எதிர்ப்புகளை சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : கற்பனை திறன் வெளிப்படும்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
தனுசு : குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஈடேறும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : கலகலப்பான நாள்.
பூராடம் : பயணங்கள் சாதகமாகும்.
உத்திராடம் : லாபம் உண்டாகும்.
மகரம் : பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் நிதானம் வேண்டும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். போட்டிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். லாபம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
கும்பம் : இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். அருள் தரும் கேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ரகசியமான சில செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : குழப்பம் ஏற்படும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
மீனம் : குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் விவேகம் வேண்டும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். உயர்நிலை கல்வியில் இருந்த குழப்பம் விலகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
பூரட்டாதி : ஒத்துழைப்பு ஏற்படும்.
உத்திரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.
ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
🌷🌷🌷🌷🌷
இதுவும் கடந்து போகும்...
வாழ்க வளமுடன் ...
🌷🌷🌷🌷🌷
Click here 👉நாளைய (13-05-2023) ராசி பலன்கள் மற்றும் பஞ்சாங்கம்













No comments
Thank you for your comments