சாலை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்..
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன் அகற்றி வருகின்றனர்
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலைகளில் கடைகள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என கடந்த மாதம் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் சாலை வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளாக உள்ள பேருந்து நிலையம் , கிழக்கு,மேற்கு, தெற்கு,வடக்கு ராஜவிதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகள் மற்றும் நடைபாதையில் அமைக்கப்பட்டு இருக்கும் விளம்பர பதாகைகள் மாநகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
மேலும் விதிகளை மீறி மீண்டும் விளம்பர பக பதாகைகள் மற்றும் சாலைகளில் கடைகளை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.
சாலையோரம் உள்ள கடைகளை மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் எதில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிவ காவல் ஆய்வாளர் விநாயகம், சுகாதார ஆய்வாளர்கள் இக்பால், ரமேஷ் உடன் இருந்தனர்.






No comments
Thank you for your comments