Breaking News

காஞ்சி சங்கர மடத்தில் மகா ருத்ர யாகம்...112 வேத விற்பன்னர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தில்  உலக மக்களின் நன்மைக்காக நடைபெற்ற மகா ருத்ர யாகத்தில் 121 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜைகளை செய்தனர்.



பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது தலைமையில் கடந்த 6 ஆண்டுகளாக காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 7 வது ஆண்டாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன் சங்கர மடத்தில் மகா ருத்ர யாகம் நடைபெற்றது.தமிழகம் முழுவதுமிருந்து 121 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜைகளை செய்தனர்.

மகா பூர்ணாகுதி தீபாரதனைக்குப் பிறகு காஞ்சி மகா பெரியவர் அதிஷ்டானத்தில் கலசாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றன. 

முன்னதாக வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. யாக பூஜையில் காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெறுகிறது.

திங்கள்கிழமை சற்குரு சிவசாமி சித்தர் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், அதைத் தொடர்ந்து அன்னதானமும்  நடைபெறவுள்ளது

No comments

Thank you for your comments