Breaking News

அங்கீகாரம் பெறாமல் கட்டடம்... நடிகர் சரவணன் அமைச்சர் தா. மோ. அன்பரசனிடம் மனு

அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை தடை செய்து கட்டிய கட்டடங்களை இடித்து மீட்டுத் தருமாறு திரைப்பட நடிகர் சரவணன் அமைச்சர் தா. மோ. அன்பரசனிடம் மனு அளித்தார்.


பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பருத்திவீரன் சரவணன்,  சுற்றுலா மாளிகையில் தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்து மனு ஒன்று அளித்தார்.

அம்மனுவில் சென்னை போரூர் அடுத்த மௌலிவாக்கம் பகுதியில் சத்ய நாராயணபுரம் எனும் பகுதியில் லேக் வியூ அப்பார்ட்மெண்ட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பு இரண்டு வீடுகளை கடந்த 2014-ம் வருடம் வாங்கி இருந்ததாகவும் அந்த அடுக்குமாடி குடியிருப்பை ஏபிசி என மூன்றாக பிரித்து 12 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட ராம மூர்த்தி மற்றும் ஜெயமணி

இதற்கு திரு ராமமூர்த்தி என்பவர் மேற்கண்ட வீட்டையும் வாங்குவதற்கு காரணமாக இடைத் தரகராக செயல்பட்டிருந்தார்.

கடந்த கொரோனா காலங்களில் மற்றும் படப்பிடிப்புக்காக சென்றிருந்த சமயத்தில் ஏ பிளாக்கில் கார் பார்க்கிங்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இரண்டு கடைகளும் பி பிளாக்கில் சிங்கிள் பெட்ரூம் வீட்டையும் சி பிளாக்கில் மேலும் இரண்டு சிங்கிள் பெட்ரூமையும் அங்கீகாரம் பெறாமல் கட்டியுள்ளார்.

அதனால் எனது யுடிஎஸ் ஆக வரவேண்டிய எனது அடி நிலம் தனக்கு வராமல் போய்விட்டதாகவும் மேற்படி 12 கிச்சன்களுக்கு அரசு அனுமதி பெற்று விட்டு 15 கிச்சன் கட்டி உள்ளார்.

கார் பார்க்கிங்கிலும் இரண்டு கடைகள் கட்டப்பட்டுள்ளதால் மேற்கண்ட அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை தடை செய்து அத்துமீறி கட்டடம் கட்டிய இடங்கள் இடித்து ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டு தருமாறு  மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காவல்துறையில் ராமமூர்த்தி இளவரசன் மற்றும் ஜெயமணி ஆகிய மூவர் மோசடி செய்ததாகவும் இது குறித்து புகார் அளித்துள்ளதாகவும், காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க விரைந்து  நடவடிக்கை எடுக்க கோரி தற்போது அமைச்சரிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments