Breaking News

இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மெயின் கிளை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மெயின் கிளையில் சார்பாக 70 வது ஆண்டு சேவையை முன்னிட்டு பெரிய காஞ்சிபுரம் துவாரகேஷ் வித்திஷ்ரம் சி. பி.எஸ்.சி பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் இந்தியன் வங்கியின் மூலம் பள்ளி வளாகத்தில் 70 மரக்கன்றுகள்  Tree Bank NGO உதவியுடன் நடப்பட்டது.


விழாவில் இந்தியன் வங்கி காஞ்சிபுர மண்டல மேலாளர் திரு A. ராஜாராமன், துணை மண்டல மேலாளர் திரு N. சங்கர், மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர் திரு. N. கார்த்திகேயன், கிளை மேலாளர் திரு. K. சந்தோஷ் குமார் மற்றும் கிளை அலுவலர்கள் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்தனர்.

பள்ளியின் சார்பாக தாளாளர் திரு. சஞ்சீவி ஜெயரங்கன் முதல்வர் திருமதி நித்ய பிரியா, தலைவர் T. கோவிந்தசாமி பொருளாளர் திரு சங்கர், உரிமையாளர் திரு சவுந்தர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

Tree Bank NGO முல்லைவேந்தன் மரங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்து அதனை வளர்க்க  வலியுறுத்தியுள்ளார்



No comments

Thank you for your comments