Breaking News

லோக ஷேமத்திற்காக சித்திரையில் அனுஷ பூஜை

ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத் சங்கம் டிரஸ்ட் சார்பில் சித்திரை மாத அனுஷ மஹோத்ஸவம் மேற்கு சைதாப்பேட்டை பார்சன் நகர் வளாகத்தில் உள்ள சங்கத்தின் அலுவலக கட்டடத்தில் சிறப்பாக நடைபெற்றது.



இதில் காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி மஹா பெரியவா அனுஷ நக்ஷத்திரத்தை முன்னிட்டு ஆயுஷ்ய, நவக்கிரக, நக்ஷ்த்ர, ஆவஹந்தி ஹோமங்களும், சிறப்பு ஹோமங்கள் வரிசையில் இந்த தடவை கத்திரி வெய்யில் தாக்கத்திலிருந்து விடுபட  சூர்ய காயத்ரி, மழைக்காக வருண, நோய்கள் நீங்க ஜ்வரஹர, தன்வந்திரி, இந்திராக்ஷி ஹோமங்களும் வெகு சிறப்பாக நடந்தேறியது.

இந்த அனைத்து ஹோமங்களையும் மேற்கு மாம்பலம் பாலாஜி சாஸ்திரிகள் குழுவினர் பங்கேற்று சிறப்பாக நடத்தினர்.

இந்த அனுஷ பூஜை வைபத்திற்கு வந்திருந்து திருமணம் கைகூடியவர்கள் திருமண அழைப்பிதழ்களையும், திருமணப்பேறு வேண்டி ஜாதக நகல்களையும் பெரியவா பாதத்தில் வைத்து வேண்டிக் கொண்டனர்.

ஹோமத்தின் நிறைவில் மஹா பெரியவாளுக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடை பெற்றது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. அனைத்து வைபவங்களும் நிறைவு பெற்று வந்திருந்த பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.

வாட்சப் மூலமாகவும், நேரிலும் சங்கல்பம் செய்து கொண்ட அனைவருக்கும் ஹோம  பிரசாதம் அளிக்கப்பட்டது. தபாலிலும் அனுப்பபடவுள்ளது. விடுமுறை தினத்தால் இன்று பக்தர்கள் எண்ணிக்கை சற்று அதிக அளவில் இருந்தது.

நமது நித்ய அன்னதான கைங்கர்யத்தின் மூலமாக மே 11ம் தேதி புற்று நோயாளிகளுக்கும், மே 14ம் தேதி முதியோர்கள் இல்லத்திலும், மே 19ம் தேதி அமாவாசை அன்று காசியிலும் வழங்கப்பட உள்ளதாகவும்  அடுத்த அனுஷ மஹோத்ஸவ நாள், சனிக்கிழமை 03.06.2023,   மஹா பெரியவா ஜெயந்தி நாளில் வருகிறது. என்றும்  மஹா பெரியவா ஜயந்தியை முன்னிட்டு சகஸ்ர கோடி நாம ஜபத்தில் அனைவரும் பங்கேற்று நிறைவேற்றுவோம் என ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத் சங்கம் டிரஸ்டி ராமன் வெங்கடா தெரிவித்தார்


No comments

Thank you for your comments