Breaking News

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விடுதி திறப்பு

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவியர் விடுதிகளை திறந்து வைத்ததையொட்டி, காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் குத்து விளக்கு ஏற்றி, தொடங்கி வைத்தார். உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் உள்ளனர்.



காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூபாய் 6.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததை ஒட்டி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி  கொண்டாட்டம்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பள்ளி மாணவிகளுக்கான ரூபாய் 1.57 கோடி மதிப்பீட்டிலும் கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 1.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

இதேபோல் ரெட்டமங்கலம் பகுதியில் பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டிலும், ஸ்ரீபெரும்புதூர் ஆதி திராவிட நலப் பள்ளியில் பயிலும் 50 மாணவர்களுக்கான விடுதி ரூபாய் 1.58 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் ரூ 6.97கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடங்களை இன்று தலைமை செயலகத்தில் காணொளி காட்சி வழியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.


இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே கட்டப்பட்ட விடுதியில் இங்கு உள்ள மாணவிகளுக்கு ஆட்சியர் ஆர்த்தி , நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வம்,  சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கட்டிடத்தினை பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் பிரகாஷ், மாமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments