Breaking News

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு ஊர்வலம்

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 


தமிழ்நாட்டில் கிராமப்புறங்களை தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசால் ‘நம்ம ஊரு சூப்பரு - Namma Ooru Superu” - விழிப்புணர்வு பிரச்சாரம் மே 1 முதல் நடைபெற்று வருகிறது. 

இதன்  தொடர்ச்சியாக இன்று சுய உதவிக்குழுக்கள் மூலம் வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களில் சுகாதாரம், திட, திரவக் கழிவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பான குடிநீர் குறித்த விழிப்புணர்வு  பிரச்சார நடைபயணத்தை தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் தொடங்கிவைத்தார்.  

இதில் கலந்துகொண்ட சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் தேவரியம்பாக்கத்தின் அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு உண்டாக்கினர்.  

ஊர்வலத்தை தொடங்கிவைத்து ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் பேசியதாவது :  

ஒவ்வொரு வீடும் சுத்தமாக பராமரிப்பதன் அவசியம். தெருக்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும், கழிவு நீரை பொது இடங்களில் வெளியேறாமல் உறிஞ்சி குழிகள் மூலம் சுத்திகரித்து வீட்டுத் தோட்டம் அமைத்தல்,  திறந்த வெளியில் மல ஜலம்   கழிப்பதை தவிர்த்து கழிவறையை பயன்படுத்துவது உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தி பேசினார்.   இதில் சுகாதார பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments