Breaking News

ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை திறந்து வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.


காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இன்று (12.05.2023) நெகிழி இல்லா காஞ்சிபுரம் மாவட்டமாக மாற்ற காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் நடத்தும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வின் அங்கமாக திருத்தலங்களில் நெகிழியை உபயோகப்படுத்துவதை தடுக்கும் பொருட்டு தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் திறந்து வைத்து, அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி பேசியதாவது:

தற்பொழுது காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்களில்  தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. 

மேலும் பொது மக்கள் நெகிழியை பயன்படுத்தாதவாறு  மஞ்சப்பையை பயன்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் பகுதிகளில் மேலும் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்தும்மாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.பிரகாஷ், அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி.வான்மதி, அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு.லட்சுமிகாந்தன்பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் திரு. ஜெகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments