Breaking News

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

வைகாசி மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம்  ஜூன் 2ம் தேதியும், திருத்தேர் உற்சவம் ஜூன் 6-ம் தேதியும் நடைபெறுகிறது


உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று அதிகாலை 2 மணி அளவில் கோவிலின் மூலவர் பகுதியில் இருந்து உற்சவர் ஆன வரதராஜ பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியுடன் கொடி மரத்தில் அருகே பக்தர்களுக்கு காட்சியளித்த பின் கருட முகம் பொறித்த பிரம்மோற்சவத்தின் கொடி பட்டச்சாரியார்கள் மந்திரங்கள் பாட கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை,மாலை, என இரு வேளையும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.

அலங்காரம் மண்டபத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி கோவில் உட்பிரகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பிரம்மோற்சவத்தில் முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம்  ஜீன் 2ம் தேதியும், திருத்தேர் உற்சவம் ஜூன் 6-ம் தேதியும் நடைபெற்று ஜூன் மாதம் 8ஆம் தேதி தீர்த்த வாரியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.

No comments

Thank you for your comments