குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி ஊராட்சியில் மேட்டுத்தெரு பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது.
இதனை சரி செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சிதம்பரம் - விருத்தாசலம் சாலையில் காளி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது பற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அப்பகுதி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்கப்படும் என கூறியதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments
Thank you for your comments