இன்று நாளை காஞ்சிபுரம் மாநகருக்குள் போக்குவரத்து மாற்றம்
காஞ்சிபுரம் அருள்மிகு சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகருக்குள் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகரத்தில் புகழ் பெற்ற அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 04.05.2023 அன்றும் மற்றும் சித்ரா பௌர்ணமி 05.05.2023 அன்றும் நடைபெறவுள்ளது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.சுதாகர் அவர்களின் தலைமையில் திரு.ஜீலியஸ் சீசர், காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் திரு.விநாயகம் மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு விழாவின்போது பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் எவ்வித இடையூறுமின்றி வந்து செல்ல ஏதுவாக காஞ்சிபுரம் மாநகருக்குள் உள்ள கீழ்காணும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1.காஞ்சிபுரம். நெல்லுக்காரத் தெருவில் எவ்வித வாகனங்கள் வராமல் தடுக்க காஞ்சிபுரம் டவுன் பேங்க் சந்திப்பு மற்றும் இரட்டை மண்டபம் சந்திப்பு அருகே தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2.காஞ்சிபுரம் டவுன் பேங்க் வழியாக இரட்டை மண்டபம் நோக்கி வரும் வாகனங்களை பூக்கடைச் சத்திரம் மற்றும் GH சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. இரட்டை மண்டபம் வழியாக டவுன் பேங்க் நோக்கி செல்லும் வாகனங்களை பேருந்து நிலையம் வழியாக மாற்றம் செய்யப்படடுள்ளது.
No comments
Thank you for your comments