Breaking News

கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம்- 2023

காஞ்சிபுரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரகத்திலுள்ள நீச்சல் குளத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம்.


இது குறித்த  செய்தியினை  காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், 

உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும் மற்றும் உயிர் காக்கும் கலையான இந்நீச்சலை மாணவ/மாணவியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கற்றுபயன் பெற்றிடவும், கோடைக்காலத்தை பயனுள்ளதாக்கிடவும்  இந்நீச்சல் பயிற்சி முகாமில் சேர்ந்து  பயன் பெறலாம்.  

12 நாட்களுக்கான இந்நீச்சல் பயிற்சி முகாமில் பயிற்சி பெற நபர் ஒன்றுக்கு ஜீ.எஸ்.டியோடு சேர்த்து ரூ.1416/- என பயிற்சி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்திலோ (அ) கைப்பேசி 7401703481 / 8072720968 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


 

No comments

Thank you for your comments