“ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற சாதனை மலர் வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாநகராட்சி பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற சாதனை மலரை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வெளியிட்டு 702 பயனாளிகளுக்கு ரூ. 417.82 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் விழா பேருரையாற்றியதாவது :
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2023ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாளன்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி, பல்வேறு நலத்திட்டங்களை மாவட்டந்தோறும் வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 702 பயனாளிகளுக்கு ரூ. 417.82 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் கடந்த ஈராண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பல்வேறு தரப்பு பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதியதாக 13,871 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வீதம் மாதந்தோறும் வழங்கப்படுகிறது, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 88 விவசாயிகளும், 60 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6,060 புதிய பயனாளிகளும், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளில் 2,402 புதிய பயனாளிகளும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 357 புதிய பயனாளிகளும், 50 வயதைக்கடந்த திருமணமாகாத ஏழை மகளிருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 93 புதிய பயனாளிகளும், ஆதரவற்ற விதவை பெண்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 2,995 புதிய பயனாளிகளும், இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1,573 புதிய பயனாளிகளும், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 303 புதிய பயனாளிகளும் சேர்க்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1000/- வீதம் உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,500/- வீதம் கடந்த டிசம்பர்-2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று (10.05.2023) நடைபெற்ற விழாவில் வருவாய் துறை சார்பாக 500 பயனாளிகளுக்கு ரூபாய் 5.25 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித் தொகையும், 202 பயனாளிகளுக்கு ரூபாய் 407.47 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாவும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூபாய் 5.10 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகளும் என ஆக மொத்தம் ரூபாய் 417.82 லட்சம் மதிப்பில் 702 பயனாளிகள் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். மேலும், மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு வளம்பெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்..
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், திருபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப் பெருந்தகை, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், குன்றத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன், திருபெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.தேவேந்திரன் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
.jpg)
.jpg)
No comments
Thank you for your comments