Breaking News

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி... ரூ.101.4/- லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறுவு மைய கூட்டரங்கில், உள்ளாட்சி  மன்ற  பிரதிநிதிகளுடன்  கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம்  கோரிக்கை  மனுக்கள் பெறும்  நிகழ்ச்சியில்  மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து  கோரிக்கை மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு ரூ.101.4/- லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒரு நாள் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின்  முன்னிலையில் மாவட்ட உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, துறைவாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் இன்று (10.05.2023) மனுக்கள் பெறப்படுகின்றது. 

இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்ககூடிய மனுக்கள் மீது உரிய  நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் நிதி ஆதாரத்துடன் கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. 

இன்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில், பெறப்பட்ட மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாயகள் தூர்வரப்பட்டு சரிசெய்ய வேண்டும்,  மின்கம்பங்களை மாற்றப்பட வேண்டும்,  சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது அதனை சரிசெய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளது.

நமக்கு தெரியாத சில பிரச்சனைகள் மற்றும் மக்களின் தேவைகளை இன்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு  அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரைத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  அவர்கள்  தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்  காஞ்சிபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் திருப்பெருமத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அவர்களுக்கு சுங்குவார்சத்திரம் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றப்பட்ட இடத்தில் குளம் நடப்பாதையுடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு CSR நிதி                 ரூபாய் 82.2 லட்சத்திற்கான நிர்வாக அனுமதி ஆணை வழங்கப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 9 பயனாளிகளுக்கு வீடுகட்ட தலா ரூ.2.4 லட்சம் வீதம் ரூ.19.2 லட்சம் அரசு மானியம் மற்றும் பணி ஆணை வழங்கப்பட்டது.  ஆக மொத்தம் ரூபாய் 101.4 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

 இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 5 ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் 2008 ஆம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட வாகனங்கள் முதிர்ந்த நிலையில் உரிய அரசு விதிமுறைகளுக்குட்பட்டு  கழிவு  நீக்கம்  செய்யப்பட்டது. தற்போது   கழிவுநீக்கம்  செய்யப்பட்ட  வாகனங்களுக்கு   பதிலாக  5  ஊராட்சி  ஒன்றிய  குழுத்  தலைவர்களுக்கு   New  Scorpio Classic – Diesel  என்ற வாகனம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களால் 10.05.2023 இன்று  உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய  குழுத் தலைவருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 4 ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களுக்கான வாகனங்கள் காஞ்சிபுரம்  மாவட்ட  ஆட்சியரக  மக்கள்  நல்லுறவு  மைய  அரங்கத்தில்  மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களால் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஊராட்சி  ஒன்றிய  குழுத்  தலைவர்களுக்கு திறவுகோல் வழங்கி,   கொடி அசைத்து  வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்  மா.ஆர்த்தி,இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், திருபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப் பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், குன்றத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன், திருபெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.தேவேந்திரன் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.           

No comments

Thank you for your comments