புதுப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்... 186 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், புதுப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 186 பயனாளிகளுக்கு ரூ.304.57/- (ரூபாய் மூன்று கோடியே நான்கு லட்சத்து ஐம்பத்திஏழாயிரம்மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், புதுப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 186 பயனாளிகளுக்கு ரூ.304.57/- (ரூபாய் மூன்று கோடியே நான்கு லட்சத்து ஐம்பத்திஏழாயிரம் மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பொது மக்களிடம் பேசியதாவது:
நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர்.
இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.
இன்று மனு நீதி நாள் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு 28.04.2023 முதல் 08.05.2023 வரை பொதுமக்களிடமிருந்து, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாற்றம், பட்டா திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ஊனமுற்றோர் திறன்பேசி, சலவைப் பெட்டி, இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 83 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, 186 தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களில், வருவாய் துறை மூலம் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா-100 நபர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 நபர்களுக்கும், குடும்ப அட்டை நகல் 10 நபர்களுக்கும், மகளிர் சுய உதவி குழு -ற்கு கீழ் நிதியுதவி -3 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம்-1 நபர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம்-2 நபர்களுக்கும், தொழில் துறை மூலம் தொழில் கடன் -5 நபர்களுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விவசாயப்பொருட்டுகள்-5 நபர்களுக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் நாற்றுகள் -3 நபர்களுக்கும், கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுய உதவித் வங்கிக் கடன்-9 நபர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டம்-5 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் 5 ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளும் மின்கல வாகனமும், தாட்கோ துறையின் மூலம் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு 3 பணியாளர்களுக்கு உதவித்தொகையும், 7 நபர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. மேலும், இந்த மனு நீதி நாள் முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறைவாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கனிமொழி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.தேவேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments