Breaking News

திடீர் ரெய்டு... தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்...


காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் இன்று நம்ம ஊரு சூப்பர் திட்டம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரால் தொடங்க வைக்கப்பட்டது.

அங்கு விழா நடைபெறும் இடத்தின் அருகே செயல்பட்டு வந்த மளிகை கடை ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பொருட்கள் வாங்கி செல்வதை கண்ட காஞ்சி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலர் செல்வகுமார் அதிரடியாக அந்த பகுதி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு இருந்ததை கண்டறிந்து அதனை அதிரடியாக பறிமுதல் செய்து அந்த இரு கடைகளுக்கும் ரூபாய் 15,000 அபராதம்  விதித்து எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments