ஹூண்டாய் மோட்டார் இந்தியாவில் தேசிய தீயணைப்பு சேவை தினம் அனுசரிப்பு
ஸ்ரீபெரும்புதூர் :
இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போக்குவரத்துத் தீர்வுகள் வழங்கும் நிறுவனமும், இந்தியாவில் துவங்கிய நாள் முதல் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமாக உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL), தேசிய தீயணைப்பு சேவை தினத்தை அனுசரித்தது.
நமது Safety குழுவினர், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு அவசர காலத்தில் தீ தடுப்பு மற்றும் தீ விபத்துகளை சமாளிப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் போட்டிகளை நடத்தினர்.
இந்த ஆண்டு மையக்கருத்தான “நாட்டின் கட்டமைப்பின் வளர்ச்சிக்கான தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு” (Awareness in Fire Safety for Growth of National Infrastructure - AGNI) பகிரப்பட்டு, இந்நிகழ்ச்சியின் போது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகமாக வைக்கப்பட்டிருக்கும் மூடிய பகுதியில் ஏற்படும் தீயை கட்டுபடுத்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், ஹைட்ரன்ட் பயன்பாடு, பக்கெட் ப்ரிகேட், தீயணைப்பான் பயன்பாடு, இலக்கில் தண்ணீர் பீயச்சுதல் போன்ற செய்முறை விளக்கங்கள் HMIL விளையாட்டு மைதானத்தில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுமார் 280 பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அதிகாரி திருமிகு P அர்நிஷா பிரியதர்ஷினி மற்றும் HMIL Chief Manufacturing Officer திரு. கோபால கிருஷ்ணன் C S ஆகியோர் போட்டிகளில் முன்னணி இடம் பிடித்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. கோபால கிருஷ்ணன் C S (Chief Manufacturing Officer, HMIL) அவர்கள், “இந்த ஆண்டின் மையக்கருத்தான “நாட்டின் கட்டமைப்பின் வளர்ச்சிக்கான தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு” என்பது நமது பணியாளர்கள் மற்றும் விநியோக அமைப்பில் இணக்கமான பணிச்சூழல் நிலவ உதவும் உறுதியான பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்க்கும் HMIன் வெற்றிகரமான “My Place My Pride” பிரச்சாரத்தை பிரதிபலிக்கிறது,” என்றார்.
நமது வளாகத்தில் இரண்டு பன்னோக்கு தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. இவை HMIன் அவசர கால தேவைக்கு மட்டுமின்றி, இங்குள்ள பிர நிறுவனங்களுக்கும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்திற்கும் தேவைப்படும்போது உதவத் தயாராக இருக்கும்.
ஹூண்டாய்மோட்டார்இந்தியாலிமிடெட்:
ஹூண்டாய் மோட்டார் கம்பெனி (HMC)யின் ஒரு அங்கமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL), இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போக்குவரத்துத்தீர்வுகள் வழங்கும் நிறுவனமும், இந்தியாவில் துவங்கிய நாள்முதல் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமும் ஆகும்.
ஹூண்டாயின் ‘மனிதகுலத்திற்கான முன்னேற்றம்’ எனும் உலகளாவிய கொள்கை, எதிர்கால தலைமுறையினர் நீடித்த தன்மை மிக்க வாழ்வியலைக் கொண்டிருக்க உதவும் தொழில்துறையின் முன்னணி தொழில்நுட்பத்தைக் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை வழங்குகிறது.
தற்சமயம், இந்தியாவெங்கும், 1 340 விற்பனை நிலையங்கள் மற்றும் 1 502 சேவை மையங்களை உள்ளடக்கிய கட்டமைப்புடன் HMIL செயல்பட்டு வருகிறது. Grand i10 NIOS, i20, i20 N-Line, AURA, VENUE, VENUE N-Line, VERNA, CRETA, ALCAZAR, TUCSON, KONA Electric மற்றும் all-electric SUV IONIQ 5 ஆகிய 12 மாடல்கள் உள்ளிட்ட வலுவான மாடல்கள் வரிசையைக் கொண்டுள்ளது. சென்னைக்கு அருகில், அதிநவீன உற்பத்தி, தரம் மற்றும் பரிசோதனை திறனைக் கொண்ட முழுமையான, ஒருங்கிணைந்த உலகத்தர தொழிற்சாலையை HMIL கொண்டுள்ளது.
HMCன் உலகளவிலான ஏற்றுமதி மையத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ள HMIL, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய பசிபிக்-ல் உள்ள சுமார் 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

No comments
Thank you for your comments