Breaking News

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களுக்கான சேர்க்கை அறிவிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களுக்கான சேர்க்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-ம் ஆண்டிற்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Online-ல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட 07.06.2023 கடைசி நாளாகும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும், விண்ணப்பங்கள் இலவசமாக பதிவு  செய்திடவும் கீழ் குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன்,  இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

இணையதள முகவரி: www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.06.2023 ஆகும். 

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:  முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம். மற்றும் கைபேசி எண்:  9789242292 9677258519, 8608728554 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments