Breaking News

அச்சிறுபாக்கம் காந்திநகர் பகுதிகளில் கழிவுநீர் கொட்டும் அவலம்.. தொற்றுநோய் பரவும் அபாயம்...

அச்சிறுபாக்கம் காந்திநகர் பகுதிகளில் கழிவுநீர் லாரி செப்டிக் டேங்கில் எடுக்கப்படும் கழிவு நீரை கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியின் 5-வது தெரு  திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

இந்தப் பகுதியில் புகழ் கழிவுநீர் எடுத்துச் செல்லும் லாரி வீடுகளில் எடுக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவு நீரை கொண்டு வந்து இந்தப் பகுதிகளில் இரண்டு மற்றும் மூன்று நாளுக்கு ஒருமுறை கொட்டப்படுவதால் துர்நாற்றமும் தொற்றுநோயும் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்ந்து இந்த பகுதியில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு  கழிவுநீர்  வெளியேற்றிவிட்டு செல்கின்றனர். கழிவுநீர் அந்தப் பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு துர்நாற்றம் வீசுகிறது.மேலும்தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளதாக ,அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் செப்டிக் டேங்கில் சேகரமாகும் கழிவுநீரை கழிவுநீர் ஊர்திகள் கொண்டு சென்று அதற்காக அரசால் உருவாக்கப்பட்ட கழிவுநீர்  நிலையங்களில் கொண்டு சேர்க்க வேண்டும். 

ஆனால்,ஆ ங்காங்கே சாலைகளில் கொட்டுவதால் சுகாதாரக்  கேடு, துர்நாற்றமும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது ஆகவே, புகழ் கழிவு நீர் ஊர்தியின் மீது சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Thank you for your comments