11-05-2023-ம் தேதி ராசி பலன்கள் மற்றும் பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, சித்திரை 28
நாள் - மேல் நோக்கு நாள் ↑
பிறை - 🌙 - தேய்பிறை
திதி : 11:27 AM வரை சஷ்டி பின்னர் சப்தமி
நட்சத்திரம் : ⭐ உத்திராடம் 02:37 PM வரை பிறகு திருவோணம்
யோகம் : சுபம் 03:16 PM வரை, அதன் பின் சுப்ரம்
கரணம் : வனசை 11:27 AM வரை பிறகு பத்திரை 10:17 PM வரை பிறகு பவம்.
🌞சூரியன் மற்றும் 🌜சந்திரன் நேரம்
சூரியோதயம் - 5:48 AM
சூரியஸ்தமம் - 6:22 PM
சந்திரௌதயம் - May 12 12:09 AM
சந்திராஸ்தமனம் - May 12 11:52 AM
அசுபமான காலம்
இராகு - 1:39 PM – 3:13 PM
எமகண்டம் - 5:48 AM – 7:22 AM
குளிகை - 8:56 AM – 10:31 AM
துரமுஹுர்த்தம் - 09:59 AM – 10:49 AM, 03:01 PM – 03:51 PM
தியாஜ்யம் - 06:21 PM – 07:51 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் - 11:40 AM – 12:30 PM
அமிர்த காலம் - 08:38 AM – 10:08 AM, 03:20 AM – 04:49 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:12 AM – 05:00 AM
வாரசூலை : சூலம் - தெற்கு, பரிகாரம் - தைலம்
🌞 சூர்யா ராசி : சூரியன் மேஷம் ராசியில்
🌜 சந்திர ராசி : மகரம் (முழு தினம்)
சந்திராஷ்டமம் : மிருகசீரிஷம், திருவாதிரை
மேஷம் : மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். மருத்துவ பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். லாபகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : சிந்தனைகள் உண்டாகும்.
பரணி : மாற்றங்கள் ஏற்படும்.
கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.
ரிஷபம் : உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : லாபம் மேம்படும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம் : எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களால் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். திட்டமிட்ட பணிகளில் சில திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில வருமான வாய்ப்புகள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் தோன்றி மறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். ஊக்கம் மற்றும் ஓய்வூதியம் கிடைப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
திருவாதிரை : வாய்ப்புகள் சாதகமாகும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கடகம் : பிறமொழி பேசும் மக்களின் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். செய்கின்ற செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொன், பொருட்களை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சஞ்சலமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.
சிம்மம் : எந்தவொரு செயலிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். தந்தைவழி தொழிலில் மேன்மை ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பமும், விரயமும் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மகம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூரம் : விரயங்கள் உண்டாகும்.
உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும்.
கன்னி : மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
துலாம் : நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றங்கள் உண்டாகும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். உயர்நிலை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். நட்புகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : மாற்றங்கள் உண்டாகும்.
விசாகம் : சாதகமான நாள்.
விருச்சிகம் : எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் மேம்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பதற்றமின்றி செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் நுட்பமாக செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : கற்பனை மேம்படும்.
அனுஷம் : வெற்றிகரமான நாள்.
கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.
தனுசு : எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் சாதகமான பலன்கள் ஏற்படும். திருப்தியான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : வரவுகள் உண்டாகும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.
மகரம் : மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகளின் மூலம் குழப்பம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அவிட்டம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம் : கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். திட்டமிட்ட பணிகள் சிறு சிறு அலைச்சல்களுக்கு பின் நிறைவேறும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : மாற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
மீனம் : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மேம்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணைவர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் சாதகமாகும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தனவரவுகளின் மூலம் கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். மகிழ்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
பூரட்டாதி : ஆதரவு மேம்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
ரேவதி : இன்னல்கள் குறையும்.
No comments
Thank you for your comments