காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 87.29% தேர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மார்ச்/ஏப்ரல் 2023 இல் நடைபெற்ற 11ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 87.29 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மார்ச்/ஏப்ரல் 2023 இல் நடைப்பெற்ற 11 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 6028 மாணவர்களும், 6962 மாணவிகளும் என மொத்தம் 12990 மாணவ, மாணவிகள் அரசுத் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 11339 மாணவ, மாணவிகள் 11 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள். சராசரியாக 87.29 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 82.96 சதவீதமும், மாணவிகள் 91.04 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளனர். மாணவிகள், மாணவர்களை விட 8.08 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளனர். இவ்வாண்டு மாவட்டத்தின் தரம் 28-வது இடத்தில் உள்ளது.
அரசுப் பள்ளிகளின் சராசரி தேர்ச்சி சதவீதம் 80.83 மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் 28வது தர வரிசையினை பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments