Breaking News

ஸ்மார்ட் பவுண்டேஷன் சார்பில் 23 மாற்றுத்திறனாளி களுக்கு பேட்டரி மூன்று சக்கர வாகனங்கள் வழங்கல்

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்மார்ட் பவுண்டேஷன் சார்பில் 23 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. 

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் பகுதியில் சென்னை ஸ்மார்ட் பவுண்டேஷன் சார்பில் 23 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது 

மூத்த காங்கிரஸ் தலைவர் எம் ஏ மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்மார்ட் பவுண்டேஷன் நிறுவனர் வழக்கறிஞர் முனைவர் அபிநயா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 



மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் உள்ள சதவீதம் குறித்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். இதில் மூத்த வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

மொபீஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்ட 23 மூன்று சக்கர பேட்டரி வாகனங்களை வழக்கறிஞர் முனைவர் அபிநயா மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 

மேலும் புதிய வாகனங்கள் பெறும் நபர்களிடமிருந்து படிவங்களும் நிரப்பப்பட்டு பெறப்பட்டது .விரைவில் அவர்களுக்கு வாகனம் வழங்கப்பட உள்ளதாக ஸ்மார்ட் பவுன்டேஷன் நிறுவனர் வழக்கறிஞர் முனைவர் அபிநயா தெரிவித்தார். 

இவர் சமூக நிறுவன பொறுப்புத் திட்ட மூத்த ஆலோசகராவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி நல நிறுவன நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments