Breaking News

கோடையில் கோச்சிங் கிளாஸ்... மாணவர்களின் மன அழுத்தத்திற்கு வித்திடும் தனியார் பள்ளி

தமிழகத்தில் கோடை விடுமுறையொட்டி பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முன்கூட்டியே வைத்து கோடை விடுமுறை விடவேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறையானது தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் 10 மற்றும் 12-ஆம் தேர்வு தேர்வுகளானது முடிந்து, அதனை தொடர்ந்து அனைத்து வகுந்புகளுக்கும் தேர்வுகளானது முடிவுற்றது. இந்த நிலையில் காஞ்சிபுரத்தின் பல்வேறு தனியார் பள்ளிகள் மாணவர்களின் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதத்தினை காட்டி அதனால் பயனடைய வேண்டும் எனும் தன்னுடைய சுப ஆதாயத்திற்காக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை கட்டாயபடுத்தி பள்ளிகளுக்கு வரவழைத்து கோச்சிங் கிளாஸ் (சிறப்பு வகுப்புகள்) நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகரின் குஜராத் சத்திரம் பகுதியின் அருகே இயங்கிவரும் சோழன் மெட்ரிக் பள்ளியானது அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளை பள்ளிக்கு கட்டாயபடுத்தி வரவழைத்து வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

மேலும் இப்பள்ளிக்கென மைதானமின்றி செயல்பட்டுவரும் இப்பள்ளிக்கு எப்படி பள்ளி கல்வித்துறை எவ்வித ஆய்வு நடத்திடாமல் அங்கீகாரம் அளித்தது எனும் கேள்வி எழுவதோடு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கையூட்டு பெற்று கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுத்திடாமல் அனுசரித்து பங்குபோட்டு கொள்கிறதோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

No comments

Thank you for your comments