பிரதம மந்திரி வீட்டுவசதி திட்ட (PMAY(G) சிறப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், இன்று (06.04.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்ட (PMAY(G) சிறப்பு முகாம் (Special Camp) நடைபெற்றது.
இம்முகாமில் PMAY(G) திட்டத்தின் கீழ் SECC மற்றும் Awaas Plus-ல் வீடு கட்ட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பணி துவங்கப்படாத பயனாளிகள் மற்றும் அனுமதி வழங்கப்பட வேண்டிய பயனாளிகளுக்கு திட்டம் தொடர்பான விவரத்தினை சிறப்பு முகாம் (Special Camp) மூலம் பயனாளிகளுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு அளித்து பணியினை துரிதமாக ஆரம்பித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
மேலும், இதேபோன்று உத்திரமேரூர் ஒன்றியத்தில் 11.04.2023 தேதியிலும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 12.04.2023 தேதியிலும், திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் 13.04.2023 தேதிகளிலும் சிறப்பு முகாம் (Special Camp) நடைபெற இருக்கின்றன.
இதில் அனைத்து பயனாளிகளும் கலந்துக்கொள்ளும் வகையில், உதவி/ஒன்றியப் பொறியாளர்கள், பணிமேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்களும் கலந்துக்கொள்ளும் வகையில் உரிய அறிவுரை வழங்கி, சிறப்பு முகாம் (Special Camp) – இல் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சிறப்பு முகாமினை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு வளர்க்கப்படும் காளான் வளர்ப்பு முறையை குறித்து கேட்டறிந்தார்.
இம்முகாமில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ச.செல்வக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பித்ஜெயின், இ.ஆ.ப., குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பயனாளிகள் கலந்துக்கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments