பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022-23-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 முதல் 20.04.2023 வரை நடைபெற உள்ளன. பொதுத்தேர்வில் 8,445 மாணவர்களும், 7,989 மாணவிகளும் என மொத்தம் 16,434 மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 5 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 6 கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள்,
65 தேர்வுமையங்களுக்கு 65 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 65 துறை அலுவலர்கள் மற்றும் 7 கூடுதல் துறை அலுவலர்கள், 11 வழித்தட அலுவலர்கள்,
81 பறக்கும் படை அலுவலர்களும், 1010 அறை கண்காணிப்பாளர்களும், சொல்வதை எழுதுபவர்களாக 105 பேரும் நியமனம் செய்யப்பட்டு தேர்வு நடைபெற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் திரு. வள்ளிநாயகம், முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி. வெற்றிச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments